All Classes

Assembly

Assembly is an integral part of building a positive school culture amongst all of our staff and students. It is a united effort in helping our students develop their confidence in communication and presentation. Leadership skills are learned through establishing and maintaining a systematic structure of the assembly process. Every Monday morning, we start our school week by gathering together and reaffirming that we will all work together in a positive, passionate and principled manner.

Bhajan

Every Friday, we gather together to sing songs, listen and share stories and to pray for the wellbeing of living creatures on our planet. Spiritual Health is such an important aspect of a child’s development. 

Work Education

Life Skills are taught during the work education classes. 

Art Education

Art Education helps children with their imaginative, cognitive and problem solving skills. 

ஆறு வகை நலன்கள்

உடல்நலம்

உடல் நலம் என்பது நோயில்லாமல் இருப்பது மட்டுமல்ல, உடலிலுள்ள அனைத்துச் செல்களும் உயிர்த்துடிப்புடன் இருப்பது என்பதுதான் உடல் நலம் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். மேலும் இத்தகைய உடல்நலத்தைப் பேண,
குழந்தைகளுக்கு நமது பாரம்பரியத்தோடு ஆரோக்கியமான உணவுகள் மற்றும் சிற்றுண்டிகளை மட்டுமே நம் அரோபிந்தோ பள்ளியில் வழங்கி வருகிறோம். அதுபோல் நமது பள்ளிக் குழந்தைகளையும் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே கொண்டு வர பணித்திருக்கிறோம். அதைக் குழந்தைகள் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதன்மூலம் மாணவர்களின் உடல் நலம் சிறந்து விளங்குகிறது. ஆகையால் மாணவர்கள் தங்களது கற்றலைத் தடையில்லாமல் கற்கின்றனர். ஆகவே நாம் அனைவரும் நம் குழந்தைகளின் உடல் நலத்தைப் பாதுகாக்க, துரித உணவுகளைத் தவிர்ப்பதிலும் தேவையற்ற கைப்பேசி பயன்பாட்டைக் குறைத்து வெளியே ஓடி ஆடிப் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவதிலும் நாம் அக்கறை செலுத்த வேண்டும்.

மனநலம்

மனநலம் என்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் ஓர் அங்கமாகும். அத்தகைய மனதை நலமாக வைப்பதற்கு
ANGER FREE ZONE – நம் பள்ளியில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்மூலம் மாணவர்கள், மனதிற்குக் கேடான சினத்தைக் கட்டுப்படுத்தி மனதளவில் நலம் பெறுகிறார்கள். மேலும் இன்றைய வாழ்க்கையில் பெரும்பாலோர் கோபம், அகங்காரம், பொறாமை போன்ற மன உணர்வுகளைக் கையாளத் தெரியாமல் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதனால் அவர்களது குணமும் செயல்களும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. இத்தகைய மன உணர்வுகளைச் சரியாகக் கையாளும் வழிமுறைகளான தியானம், யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை அறிந்து, நாமும் நம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நிறுத்திச் செயல்படுவோம்.

சமூக நலம்

ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு சமூக இணக்கத்தை ஏற்படுத்துவது மாணவர்கள்தான்.
அத்தகைய நம் பள்ளி மாணவர்களின்
வகுப்பறையில் மாணவத் தலைவன் என்பது இல்லை. ஏனென்றால் அவரவர் நடத்தைகளுக்கு அவரவரே பொறுப்பாவார் என்ற முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதுபோல் நாம் அனைவரும் சமூக நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுவோம்.

மேலும் நம் அரோபிந்தோ பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்களுக்கு அழைப்பு விடுத்துப் பேசுகின்றனர்.
இதன்மூலம் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து செயல்படுவதால் மாணவனின் சமூக நல வளம் பெருகுகிறது. ஆகையால் ஒவ்வொரு மாணவனின் கல்வியிலும் ஒழுக்கத்திலும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகிய இருவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

சுற்றுச்சூழல் நலம்

சுற்றுச்சூழல் என்பது மனிதனுடைய அல்லது மனிதன் உள்ளிட்ட சமுதாயத்தின் வெளிப்புறத் தன்மைகளைப் பொதுவாகக் குறிப்பிடுகின்றது. அதாவது நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீர், காற்று, விண்வெளி, காடுகள், கடல்கள், விலங்கினங்கள், பறவைகள் மற்றும் புழு பூச்சியினங்களின் இயக்கம், தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் சுற்றுச்சூழல். இத்தகைய சுற்றுச்சூழலைப்
பாதுகாக்க
PLASTIC FREE ENVIRONMENT – நெகிழியில்லாத சுற்றுச்சூழலை உருவாக்குதலை நம் அரோபிந்தோ பள்ளி முன்னெடுத்துச் செல்கிறது. வீட்டில் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியும் நெகிழிப் பொருட்களை மாணவர்களைப் பள்ளிக்குக் கொண்டு வரச் செய்து அதை மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கிறோம். அதுமட்டுமல்லாமல் நம் பள்ளி மாணவர்கள் மூலம் 25000க்கும் மேற்பட்ட காகிதப் பைகள் தயாரித்துத்  தாராபுரம் பகுதியிலுள்ள கடைகளில் கொடுத்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறோம். மேலும் மாணவர்கள் குடிக்கப் பயன்படுத்தும்  தண்ணீர் குடுவை, உணவு கொண்டு வரும் உணவுப் பெட்டி, புத்தக மேலுறை, ஏடுகளின் மேலுறை ஆகியவற்றில் நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்தி இருக்கிறோம். அதோடு சுற்றுச்சூழலின் மீது அக்கறை கொண்டு அமராவதி ஆற்றைச் சுத்தம் செய்தல், கோவில்களைச் சுத்தம் செய்தல், மரக்கன்றுகளை நடுதல், விதைப்பந்துகளை விதைத்தல் போன்ற செயல்களை, நம் அரோபிந்தோ பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து தொடர்ந்து செய்து வருகிறோம். இதுபோல் நம் சுற்றுச்சூழலை நல்ல முறையில் பேணிக் காத்து அடுத்த, தலைமுறைக்குக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

ஆன்மீக நலம்

ஆன்மீகத்தை ஒரு ஞானம், அல்லது இறைவனோடு இணையும் கலை அல்லது இறைவனோடு இணைய ஒரு கோட்பாடு என வரையறுக்கலாம். ஆகையால் இது நமது வாழ்வை இறைவனோடு ஒன்றாக வாழும் வளர்ச்சியைப் பற்றி ஊக்குவிக்கிறது.
அத்தகைய ஞானத்தைப் பெற்று நலமாக வாழ
மாணவர்களுக்கு யோகக் கலை, பஜனை வழிபாடு, விருட்ச பூஜை வழிபாடு, ஜல பூஜை, கோ பூஜை ஆகியவற்றைக் கற்பித்து, இவ்வழிபாடுகளில் ஈடுபடச் செய்து மாணவர்களின் ஆன்மீக நலத்தைப் பேணிப் பாதுகாக்கிறோம். மேலும் இதன்மூலம் மன நிறைவு, மன மகிழ்ச்சி, மன அமைதி, மனதை ஒருநிலைப் படுத்துதல் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு ஒரு வளமான வாழ்வை வாழ்வோம்.

அறிவுசார் நலம்

அறியப்படுவது அறிவு. நாம் இதுவரை அறியாதிருந்ததை அறிய நேரும்போது புதுமையாக ஒன்றை அறிந்து கொள்கிறோம். அத்தகைய அறிவுசார்ந்த சிந்தனை மாணவர்களின் எதிர்கால இலக்கை அடைய வழிவகுக்கும்.
நமது பள்ளியில் கற்றலில் மாணவர்களின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆசிரியர்களும் மாணவர்களும் எந்தச் செயலைச் செய்தாலும் ஏன் இதைச் செய்ய வேண்டும்? என்ற கேள்வியைக் கேட்பார்கள். மாணவர்களையும் நிறைய கேள்விகள் கேட்கத் தூண்டுகிறார்கள். இதன்மூலம் மாணவர்களின் அறிவு வளர்ச்சி மேம்படுகிறது. இதுபோல, எந்தச் செயலாக இருந்தாலும் ஏன் இதைச் செய்ய வேண்டும்? ஏன் இதைப் பயன்படுத்த வேண்டும்? என்று இது போன்று கேள்விகளை நமக்குள்ளும் பிறரிடமும் எழுப்பும்போது ஒன்றைப் பற்றிய முழுமையான அறிவைப் பெற முடியும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து செயல்படுவோம்.

Share This